அப்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக, அமெரிக்கா ஆதரவு கொடுக்கும் என்று பேசினார். ஒபாமாவின் இந்த அறிவிப்பு நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு கடும் எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐ.நா.சபையில் இந்தியா நிரந்தர இடம் பெற அமெரிக்கா ஆதரவு வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு இப்படி ஒரு ஆதரவு அளித்தால் அது தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திர தன்மையையும் சீர் குலைக்கும் என கூறியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறும்போது, இந்தியா–பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்க கூடாது என தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி