செய்திகள்,விளையாட்டு உலக கோப்பையில் இருந்து வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் நரேன் விலகல்!…

உலக கோப்பையில் இருந்து வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் நரேன் விலகல்!…

உலக கோப்பையில் இருந்து வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் நரேன் விலகல்!… post thumbnail image
செயின்ட்ஜான்ஸ் (ஆன்டிகுவா):-வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரேன் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் உலக கோப்பை போட்டியில் இருந்து சுனில்நரீன் விலகியுள்ளார். இதை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் அவரது பந்து வீச்சு குறித்து சாம்பியன் லீக் போட்டியில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருப்பதாக கூறி இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.இதை தொடர்ந்து சமீபத்திய இந்தியாவுக்கு எதிரான தொடர், தென்ஆப்பிரிக்க பயணத்தில் அவர் இடம் பெறவில்லை. ஆனால் உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். தனது பந்து வீச்சை சரி செய்வதற்காக சுனில்நரீன் உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கேள்வி எழுப்பும் முன்பு அவர் விலகியதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரரை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. சுனில்நரீன் விலகியது வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு மேலும் பாதிப்பாகும்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் உள்ள முன்னாள் கேப்டன் பிராவோ, போல் லார்ட் ஆகியோர் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அந்த அணி ஏற்கனவே பலவீனப்பட்டு இருந்தது. தற்போது சுனில்நரீன் விலகியது மேலும் பலவீனத்தை காட்டுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி