வாஷிங்டன்:-பேஸ்புக்கை யார் ஹேக் செய்தது என்று நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம், அது நாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் என்ற ஹேக்கிங் குழு டுவிட்டரில் வரிசையாக இதுபற்றி பல டுவிட்களைக் கொடுத்து வருகிறது. பேஸ்புக் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், டிண்டர், எய்ம், கிப்சாட் என்று பல தளங்களை முடக்கியதாக லிசார்ட் ஸ்குவாட் தெரிவித்துள்ளது.
சர்வதேச நேரப்படி 11.50 மணிக்கு முடக்கப்பட்ட பேஸ்புக் 45 நிமிடங்கள் செயல்படாமல் இருந்தது. இந்த சம்பவம் குறித்து பேஸ்புக் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இன்ஸ்டாகிராம் இன்னும் முடக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு வரவில்லை.பேஸ்புக் வலுவான பாதுகாப்பு அமைப்பு கொண்டது என்பதால் அது தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதை நன்கு அறிந்த லிசார்ட் ஸ்குவாட் விளம்பரத்திற்காகவே இதை செய்திருக்கக் கூடும் என்று இணைய வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ‘லிசார்ட் ஸ்குவாட்’ ஏற்கனவே அமெரிக்காவின் ‘சோனி பிக்சர்ஸ்’ தாக்குதலுக்கும் காரணமென்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி