காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பாதியில் இருந்து விலகிய ஜடேஜா உடல் தகுதி பெற்றதால் இன்றைய போட்டியில் இடம் பெற்றார். இதேபோல இஷாந்த் சர்மாவும் தேர்வு பெற்றார். புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டார். உடல் தகுதி பெறாததால் ரோகித் சர்மா இடம் பெறவில்லை. இந்த ஆட்டத்திலும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்தியா தரப்பில் தவான் 8 ரன்களிலும், ராயுடு 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரகானே 28 ரன்களும், கோலி 3 ரன்களும் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு அணிகளும் தலா இரண்டு புள்ளிகளைப் பெற்றது.
30-ம் தேதி பெர்த்தில் நடைபெறும் அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இன்றைய ஆட்டம்போன்று முடிவு தெரியாமல் இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்து கொண்டால், இங்கிலாந்து அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி