சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள ராகவன், ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளராக வேலை பார்த்திருக்கிறார். பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்துள்ளார். 1954-ம் ஆண்டு வைரமாலை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடியெடித்து வைத்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக் கால நடிகர்கள் முதல் ரஜினி, கமல், அஜீத், விஜய், விமல், விஜய் சேதுபதி என்று இந்த கால நடிகர்கள் வரை பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சென்னையில் வசிந்து வந்த ராகவன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சனிக்கிழமை மாலை சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு பேரனும் இருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி