சென்னை:-தமிழ் சினிமாவின் இளையதளபதியான நடிகர் விஜய், என்னதான் பல்வேறு இன்னல்களுக்கு பின்னர் தன்னுடைய படங்களை வெளியிட்டாலும், ரசிகர்களிடையே அவர் பெறும் வரவேற்பை பார்த்தால் அவர் படங்களை எதிர்ப்பவர்கள் வாயடைத்து போவார்கள்.
இப்போது விஜய்யை தேடி ஒரு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளதாக, அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஐரோப்பிய பட நிறுவனம் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க முன்னணி இந்திய நடிகர் ஒருவரை தேடிவந்த நிலையில், இப்போது அவர்கள் விஜய்யை அணுகியுள்ளனர்.
அவர் இந்த படத்தில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி