திருவனந்தபுரம் :- மலையாள பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சமீபகாலமாக சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சுரேஷ்கோபி பாரதீய ஜனதாவில் இணைய உள்ளதை கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் முரளிதரன் உறுதிபடுத்தி உள்ளார்.
இதுபற்றி கோட்டையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள பா.ஜ.க. மாநில தலைவர் முரளிதரன் கூறியதாவது:–
பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் சுரேஷ்கோபியை பாரதீய ஜனதாவில் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். சரியான நேரத்தில் தனது முடிவை தெரிவிப்பதாக அவரிடம் சுரேஷ்கோபி உறுதி அளித்துள்ளார். பாரதீய ஜனதாவில் இணையுமாறு சுரேஷ்கோபிக்கு அதிகார பூர்வமாக அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இது பற்றி அவர் விரைவில் பதிலளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி