செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 2014ம் ஆண்டில் அதிகம் உபயோகிக்கப்பட்ட மோசமான பாஸ்வேர்டு 123456!…

2014ம் ஆண்டில் அதிகம் உபயோகிக்கப்பட்ட மோசமான பாஸ்வேர்டு 123456!…

2014ம் ஆண்டில் அதிகம் உபயோகிக்கப்பட்ட மோசமான பாஸ்வேர்டு 123456!… post thumbnail image
கலிபோர்னியா:-பாஸ்வேர்டு வைப்பது ஒரு கலை என்று மறைமுகமாக சொல்கிறது கலிபோர்னியாவின் லாஸ் கேட்டோஸ் மையமாக கொண்ட பாஸ்வேர்டு மேலாண்மை நிறுவனம். கடந்த ஆண்டு ஆன்லைனில் திருடப்பட்டு, கசிந்த மில்லியன் கணக்கான பாஸ்வேர்டுகளை ஆய்வு செய்த அந்நிறுவனம் மோசமான கடவுச்சொற்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 123456 என்ற பாஸ்வேர்டு அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக 12345 மற்றும் 12345678 போன்றவை பாஸ்வேர்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் monkey, qwerty, football, abc123, batman, 123123, 111111, superman, jennifer போன்றவையும் பாஸ்வேர்டாக பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிந்தது. இ-மெயில், ஏடிஎம், உட்பட பல சேவைகளுக்காக பாஸ்வேர்டை பயன்படுத்துவதால் பலரும் எளிதில் நினைவிருக்கும் பெயர்களையே வைக்கிறார்கள். இது மற்றவர்கள் எளிதாக அதை ஹேக் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு பட்டியல் வெளியிட்ட நிறுவனம் சில ஆலோசனைகளையும் கூறியுள்ளது.

உங்களுக்கு பிடித்த விளையாட்டு, பிறந்த தேதி, பிடித்த பிரபலங்களின் பெயர்கள், தட்டச்சு செய்வதற்கு எளிமையான சொற்களை பாஸ்வேர்டாக உபயோகிக்க வேண்டாம். அதே நேரம் எண் மற்றும் எழுத்தால் இணைந்த பாஸ்வேர்டுகளை உபயோகப்படுத்தலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாட்டினர் பயன்படுத்திய பாஸ்வேர்டுகளை கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. வலைத்தளங்கள் மற்றும் பெருநிறுவன நெட்வொர்க்குகள் மீதான தாக்குதல்களின் போது அவற்றை திருடும் ஹேக்கர்கள் பாஸ்வேர்ட் போன்ற முக்கிய தரவுகளை ஆன்லைனில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி