வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா– மிசிலி தம்பதியருக்கு சசா, மலியா என்று 2 மகள்கள் உள்ளனர். சசாவுக்கு 16 வயதாகிறது. மலியாவுக்கு 13 வயதாகிறது. சசா, மலியா இருவரும் வாஷிங்டனில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒபாமா வெளிநாடுகளுக்கு செல்லும் போது உடன் செல்வதுண்டு.
வருகிற 25ம் தேதி ஒபாமா இந்தியா வரும் போது, சசா, மலியா இருவரும் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் படிக்கும் பள்ளியில் அவர்களுக்கு லீவு கிடக்கவில்லை.பள்ளிக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் வெளிநாடு செல்லுங்கள். இப்போது வகுப்புகளை தவிர்க்காதீர்கள் என்று சசா, மலியா, இருவரிடமும் பள்ளி நிர்வாகம் கேட்டு கொண்டது. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே ஒபாமா இந்தியா வரும் போது அவருடன் அவர் மனைவி மிசிலி மட்டும் உடன் வருவார் என்று அமெரிக்க பாதுகாப்பு துணை ஆலோசகர் அறிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி