செய்திகள்,விளையாட்டு வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!…

வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!…

வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாடம் கற்கவில்லை – கவாஸ்கர்!… post thumbnail image
பிரிஸ்பேன்:-3 நாடுகள் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் பந்து வீச்சு மீண்டும் ஏமாற்றம் அளித்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.இந்நிலையில் இந்திய பவுலர்கள் மீது முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

வெளிநாட்டு பயணத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் இன்னும் பாடம் கற்கவில்லை. கடந்த கால அனுபவங்களில் இருந்து பவுலர்கள் இன்னும் எதையும் கற்காதது வேதனையே. உலக கோப்பை நெருங்கும் இந்த நேரத்தில் இது கவலை அளிப்பதாகும். உலககோப்பை போட்டிக்கு பவுலர்களில் எனது முதல் தேர்வு புவனேஸ்வர்குமார், முகமது ஷமி ஆக இருக்கும். ஸ்டூவர்ட் பின்னி அடுத்த நிலையில் உள்ளார். அதன் பிறகு 2 சுழற்பந்து வீரர்கள் இருக்க வேண்டும்.

ஏனென்றால் புவனேஸ்வர் பேட்டிங்கிலும் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர். சிறந்த பீல்டரும் ஆவார். முகமது ஷமியும் பீல்டிங் சிறப்பாக செய்யக்கூடியவர். பின்னியுடன் தேர்வு செய்யப்படும் 2 சுழற்பந்து வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடியவர்கள். 15 பேர் உலக கோப்பை அணியில் இஷாந்த் சர்மா தேவையில்லை என்றே கருதுகிறேன். அவருக்கு பதிலாக மொதிக் சர்மாவை தேர்வு செய்து இருக்கலாம். ஏனென்றால் அவர் சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர். திறமை வாய்ந்த பேட்ஸ்மேனான வீராட்கோலி கடந்த 2 ஆட்டத்திலும் சரியாக ஆடாவிட்டாலும் இனிவரும் போட்டிகளில் நல்ல நிலைக்கு திரும்புவார். இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி