சென்னை:-சிம்புதேவனின் ‘புலி படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஜய். ’புலி’ கோடை கால விடுமுறை கொண்டாட்டமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என முன்பே அறிவிக்கப்பட்டது போல் ’புலி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவிற்கு பிறகு இந்த படம் துவங்க உள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல ருசிகர தகவல்களை கூறியுள்ளார். இதில், இப்படம் எங்களுக்கு மிகவும் முக்கியமான படம், இந்த படத்தில் 2 காதல் பாடல்கள் உள்ளது. அப்பாடல்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவர்ந்து இழுக்கும், மேலும், விஜய் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இதற்காக படக்குழு இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறது என கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி