சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டது. மேலும், இன்று படம் சென்ஸாருக்கு செல்வதாக இருந்தது, இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி படம் நாளை தான் சென்ஸார் செல்கிறதாம், படத்தின் ரிலிஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது படம் சொன்ன தேதியில் வருமா?… என்று ரசிகர்களிடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி