இருந்தாலும், அதன்பிறகு வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ராஜேஷ் இயக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ராஜேஷ்-சந்தானம் கூட்டணியில் ஏற்கெனவே 4 படங்கள் வெற்றியடைந்ததால் இந்த படத்திலும் அந்த கூட்டணி இணைந்திருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் கொடுத்திருப்பதால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக தாமிரபரணி பானு நடிக்கிறார். இப்படத்திற்கு பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து முழுநேர கதாநாயகனாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம் சந்தானம். இவர் தற்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அஷ்னா சவேரி, அகிலா கிஷோர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி