சென்னை:-நடிகை திரிஷா தயாரிப்பாளர் வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23ம் தேதி சென்னையில் நடக்கிறது. நிச்சயதார்த்தம் குறித்து திரிஷா கூறியதாவது:– எனது நிச்சயதார்த்தம் குடும்ப நிகழ்ச்சியாக நடக்க உள்ளது. இதில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
விருந்துக்கு தமிழ், தெலுங்கு பட உலகில் இருந்து நண்பர்களை அழைக்கிறேன். நிச்சயதார்த்தத்துக்கான புடவை மற்றும் நகைகளை நான் விளம்பர தூதுவராக இருக்கும் கடைகளில் இருந்து வாங்கி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி