செய்திகள்,முதன்மை செய்திகள் தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!…

தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!… post thumbnail image
ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஐதராபாத்தில் மட்டும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

இதுவரை மாநில அரசுக்கு சொந்தமான காந்தி மருத்துவமனையில் 9 பேரும், உஸ்மானியா பொது மருத்துவமனையில் 2 பேரும் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மத்திய அரசு தனது மருத்துவ குழுவை அனுப்பி வைத்து நோய் பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பன்றிக்காய்ச்சல் தீவிரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி