ரோம்:-பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் நகருக்கு திரும்பினார். அப்போது, விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குழந்தை பேறு குறித்து அவர் கூறியதாவது:– நான் 7 குழந்தைகளின் தாயை சந்தித்தேன். அப்போது, அவர் 8–வது குழந்தைக்காக கர்ப்பமாக இருந்தார். அவரிடம் அது குறித்து கேட்ட போது, கடவுளிடம் நான் உண்மையாக இருக்கிறேன். கடவுள் எங்களுக்கு தருகிறார். நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் என்றார்.
அதற்காக முயல் குட்டிகள் ஈன்றுவது போன்று அதிக குழந்தைகள் பெற வேண்டியதில்லை. நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவ பெற்றோர்கள் அளவான குழந்தைகள் பெற்று வளமோடு வாழ வேண்டும். கிறிஸ்தவ தேவாலயங்களின் அறிவுறுத்தலின்படி செயற்கையான கருத்தடை முறையை பயன்படுத்தி குழந்தை பேறை தடுத்து கொள்ளலாம். நான் சந்தித்த பெண் 8–வது குழந்தை பெறும் போது விட்டு சென்று விட்டால், அவளது மற்ற 7 குழந்தைகளும் அனாதையாகி விடும் அபாயம் ஏற்படும். எனவே, அதிக குழந்தைகள் பெற வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி