அதனையடுத்து ஐரோப்பிய யூனியனை சேர்ந்த உணவு மற்றும் கால்நடை அதிகாரிகள் குழு இந்தியா வந்து, அல்போன்சா மாம்பழம் உள்ளிட்ட காய்கனிகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும், பேக்கிங் செய்யும் பகுதிகளையும் பார்வையிட்டனர். அப்போது இந்திய அதிகாரிகள் அவர்களின் கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்தனர். இதில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று புரூசெல்ஸ் நகரில் கூடிய ஐரோப்பிய கமிஷன் குழுவின் கூட்டத்தில் இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், காய்கறிகளை இறக்குமதி செய்வது தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு மேலும் சில ஆதாரங்களை பரிசீலித்த பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனுக்குத் தேவையான காய்கனிகளில் 50 சதவீதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய காய்கனிகளுக்கு ஐரோப்பிய யூனியன் வரும் டிசம்பர் மாதம் வரை தடை விதித்திருந்த நிலையில், மாம்பழங்களுக்கு மட்டுமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதால், இதர தடைகளும் விரைவில் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி