இந்நிலையில், இந்தியில் மீண்டும் அபிஷேக் பச்சனுடன் இணைந்து ‘ஆல் இஸ் வெல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அசின் உடல் எடை அதிகரித்திருந்தால், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவற்றை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2 வாரங்கள் படப்பிடிப்பை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பில் அபிஷேக் பச்சனும், அசினும் இணைந்து ஆடும் பாடல் ஒன்றை படமாக்கவுள்ளனர். மேலும், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதி ராணி நடித்து வந்தார். தற்போது, அவர் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதால், அவருக்கு பதிலாக சுப்ரியா பதக் நடிக்கவுள்ளார். எனவே, அசினும், ஸ்மிரிதி ராணியும் இணைந்து நடித்த காட்சிகள் மீண்டும் படமாக்கப்படவுள்ளது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வந்த செய்திகள் தங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி