சென்னை:-நடிகர்+தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் வெற்றி நடைப்போடுபவர் விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆம்பள திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், படக்குழு அதற்குள் சக்சஸ் மீட் வைத்து விட்டது.
இதில் பேசிய விஷால், ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷ்ணு, எனக்கும் லட்சுமி மேனனுக்கு காதல் என்று பேப்பரில் கூறியதாக கேள்விப்பட்டேன். இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை தந்தது, அதனால், இனி எந்த விழாக்களுக்கும் நண்பர்களை அழைப்பதாக இல்லை என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி