சென்னை:-நடிகர் அஜீத் நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றும் யூடியூப்பில் சாதனை படைத்தும் வருகிறது.
அனைவரின் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதற்கு முன் இப்படத்தை 21ம் தேதி சென்சாருக்கும் அனுப்ப படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி