உடனடியாக அக்குழந்தையை பிலடெல்பியாவில் உள்ள செயின்ட் கிறிஸ்டோபர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கடுமையான தீக்காயங்களின் காரணமாக சேர்த்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் குழந்தையின் தாயான 22 வயதாகும் டோர்விலியரைக் கைது செய்தனர்.
டோர்விலியர் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை தன் குழந்தையின் மீது ஊற்றிக் கொளுத்தி சாலையின் நடுவே போட்டுவிட்டு செல்ல முயன்றபோது அருகிலிருந்தவர்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தாக பெம்பர்டன் டவுன் ஷிப் காவல்துறை தலைமையாளர் டேவிட் ஜண்டாஸ் தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 5 டாலர் ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிபதி ஜீயன்னே டி கோவர்ட் உத்தரவிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி