பயிற்சி என்பது மிகவும் முக்கியமானது. எனவே, நாட்டுக்கு அதிக பதக்கங்களை பெற்று தருவதற்காக நான் பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். உலகக் கோப்பை, ஒலிம்பிக் போன்ற பெரிய போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக வெளிநாடுகளின் அழைப்பையேற்று வேறுசில போட்டிகளிலும் பங்கேற்க வேண்டியுள்ளது. ஒரு வளையத்துக்குள் போட்டிக்காக விளையாடுவது நமது உடல்தகுதிக்கான சோதனையாக மட்டும் அமைவதில்லை. நமது செயல்திறன் மற்றும் நம்பிக்கையின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.
அதேவேளையில், காயம் ஏற்படும் அபாயமும் உள்ளதால் தொடர்ந்து அதிக போட்டிகளில் பங்கேற்பதும் நல்லதல்ல. இது தொடர்பாக இன்னும் நான் இறுதி முடிவு எடுக்கவில்லை. எனினும், 2016-ம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் அனேகமாக வேறு போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். ஒருவேளை, நான் ஓய்வு பெறவும் கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி