சென்னை:-விஷால்-ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆம்பள’ படம் நாளை மறுநாள் பொங்கலன்று வெளியாகவிருக்கிறது. விஷாலுடைய சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தின் தலைப்பை உரிமை கொண்டாடி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
ஸ்ரீசாய் சினி சர்க்கியூட் என்ற நிறுவனத்தை சேர்ந்த கோபாலன் என்பவர், ‘ஆம்பள’ படத்தின் தலைப்பு என்னுடையது. அதை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதற்காக நான் ஒரு பெரும் தொகையை செலவிட்டு, 40 சதவிகித அளவுக்கு படப்பிடிப்பும் நடத்தி முடித்திருக்கிறேன். தற்போது, இதே தலைப்புடன் படம் வெளிவந்தால் எனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்று 15-வது சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரணைக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகளிடம், விஷாலின் வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்டுக் கொண்டதையடுத்து, வழக்கை ஒருநாள் ஒத்தி வைத்துள்ளார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி