சென்னை:-நடிகர் அஜித் என்றும் தன் ரசிகர்கள் மீது நல்ல மரியாதை வைத்திருப்பவர். இதனால் தான் ஆரம்பம் படத்தில் ஏற்பட்ட விபத்தில் கூட, வலியை பொறுத்து கொண்டு வீரம், என்னை அறிந்தால் என நடித்தார். தற்போது சிவா படத்திற்கும் அஜித் ரெடி, பிப்ரவரியில் ஷுட்டிங் என கூறி வந்த நிலையில், அவரின் கால் வலி மேலும் ஷாலினி கர்ப்பமாக இருப்பதால் அவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இதனால், படப்பிடிப்பிற்கு 5 மாதம் ஓய்வளித்துள்ளாராம். ஏற்கனவே என்னை அறிந்தால் தள்ளிப்போன சோகத்தில் இருக்கும் தல ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு ஏமாற்றம் தான் என்றாலும், சில ரசிகர்கள் தல எப்ப வந்தாலும் எங்களுக்கு ஒகே தான் என்று கூறி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி