செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் தர வரிசையில் இலங்கை வீரர் சங்கக்கரா முதலிடம்!…

டெஸ்ட் தர வரிசையில் இலங்கை வீரர் சங்கக்கரா முதலிடம்!…

டெஸ்ட் தர வரிசையில் இலங்கை வீரர் சங்கக்கரா முதலிடம்!… post thumbnail image
துபாய்:-டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிவில் சர்வதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இலங்கை-நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவில் புதிய தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பேட்டிங் தர வரிசையில் இலங்கை வீரர் சங்கக்கரா (909 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்சை (908 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சங்கக்கரா மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி