அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார்: ராஜபக்சே மகன் சவால்!…

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார்: ராஜபக்சே மகன் சவால்!…

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார்: ராஜபக்சே மகன் சவால்!… post thumbnail image
கொழும்பு:-முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே. இவர் இலங்கை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சியின் எம்.பி.யாக உள்ளார். ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாரிசாக இவர் கருதப்படுகிறார். நமல் ராஜபக்சே இலங்கையில் நீலப்படை என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்த படையை பயன்படுத்தி நமல் ராஜபக்சே, அரசுக்கு இணையான அதிகாரத்தை கையில் வைத்திருந்தார் என்ற புகார் கூறப்பட்டது.

தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் நமல் ராஜபக்சே ஏராளமான பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நமல் ராஜபக்சே தனது நீலப்படையில் பொறுப்புகள் கொடுத்து இருப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.நமல் ராஜபக்சே மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டு இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நமல் ராஜபக்சே இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–
என் மீது கூறப்படும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. என் மீது வழக்கு போடப்போவதாக மந்திரி கூறி இருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். அவர் என் மீது வழக்கு போடட்டும் பார்க்கலாம். அந்த வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். இவ்வாறு நமல் ராஜபக்சே சவால் விட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி