பெய்ஜிங் :- பால் விலை உயர்த்தி தருமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் பால் உற்பத்தி செய்யும் பசுக்களை கொன்று வருகின்றனர். மேலும், உற்பத்தியாகும் பாலை விற்பனைக்கு அனுப்பாமல் தரையில் கொட்டி அழித்து வருகின்றனர்.
இதன் மூலம் பால் வினியோகம் குறைந்து தங்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர். இது போன்ற இக்கட்டான நிலை இதற்கு முன்பு தங்களுக்கு வந்ததில்லை என தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி