தற்போது ‘டாணா’ திரைப்படத்துக்கு ‘காக்கி சட்டை‘ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் வெற்றிபெற்றதால் ‘காக்கி சட்டை’ திரைப்படம் மீதும் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். வழக்கமாக காமெடி கலந்த கதாபாத்திரத்தில் மட்டுமே இதுவரை நடித்துவந்த சிவகார்த்திகேயன் இதில் சீரியசான போலீஸ் அதிகாரியாக ஆக்சன் ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நாயகி ஸ்ரீதிவ்யா இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார். மற்ற முக்கிய துணைக்கதாபாத்திரங்களில் பிரபு, மனோபாலா, வித்யுலேகா ராமன், இமான் அண்ணாச்சி, விஜய் ராஸ் மற்றும் வினு தாமோதர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப்படத்துக்கும் இசையமைத்துள்ளார் என்பதால் படத்தின் இசைமீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் படத்தின் காமராவை எம்.சுகுமார் கையாண்டுள்ளார். ‘காக்கி சட்டை‘ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிகிறது.
காக்கி சட்டை படத்தின் டிரைலர்:-
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி