ஹைதராபாத் :- இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று திரட்டும் புதிய முயற்சி தான் இந்த சிசிஎல். இப்போட்டியில் சென்னை ரைனோஸ் அணி இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.தற்போது நடந்து வரும் சிசிஎல் 5 போட்டியில் முதல் ஆட்டத்தில் சென்னை அணி, கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதியது.முதலில் பேட் செய்து சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் சேர்த்தது.
இதில் அதிக பட்சமாக நடிகர் சாந்தனு 52 ரன்களை சேர்த்தார்.இதை தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 59 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 52 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்த சாந்தனுவிற்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி