349 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் லோகேஷ் ராகுலும், முரளி விஜயும் களம் இறங்கினர். மிகவும் நிதானமாக இந்த ஜோடி ஆடியது. இதனால் இந்திய அணி 7 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. 10 ஓவரை வீசிய லயன் பந்து வீச்சில் முரளி விஜய் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்களை சேர்த்து ரசிகர்களை சிறிது உற்சாகப்படுத்தினார்.
தொடக்க ஜோடி 46 ரன்களை குவித்திருந்த போது ராகுல் சர்மா லயன் பந்தில் 16 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ரோகித் சர்மாவும் நிதானமாக ஆடினார்.
இந்திய அணி சற்று முன் வரை 35.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. முரளி விஜய் 46 ரன்களும் (98 பந்துகள்), ரோகித் சர்மா 39 ( 89 பந்துகள்) ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற மேற்கொண்டு 245 ரன்களை சேகரிக்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி