நள்ளிரவு நேரம் என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று, அந்த ஊரின் செல்வந்தர் மற்றும் நல்லவன் என்ற போர்வையில் இருக்கும் விடியல் ராஜுவிடம் அடைக்கலம் கேட்கிறார்கள்.
இந்த ஊரில் காதல் ஜோடிகள் எல்லாம் தற்கொலை செய்து வருவதாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால், இந்த தற்கொலைகள் எல்லாம் கொலை என்று கூறும் போலீஸ், அதற்கான ஆதாரத்தை தேடி வருகிறது. அடைக்கலம் தேடிச் சென்ற ஹரி-மான்ஸ் ஜோடியை விடியல் ராஜு தன் கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கிறார். ஒரு நாள் விடியல் ராஜுவின் வீட்டிற்கு செல்கிறார் ஹரி. அங்கு கெஸ்ட் ஹவுஸில் ஹரி தங்கியிருக்கும் அறையில் நடப்பதை வீட்டில் உள்ள வீடியோவில் பார்க்கிறார். மேலும் ஊரில் நடக்கும் காதல் ஜோடிகளின் கொலைகளுக்கு விடியல் ராஜுதான் காரணம் என்றும் உறுதி செய்கிறார். அதன்பின் தன் காதலியான மான்ஸை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு செல்கிறான்.
இதற்கிடையில் மான்ஸின் தந்தை, இவர்களை தேடி விடியல் ராஜுவின் ஊருக்கு வருகிறார். மறுமுனையில் காதல் ஜோடிகள் கொலைக்கான ஆதாரத்தை கண்டுபிடித்த போலீசார், விடியல் ராஜை பிடித்து என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஹரி-மான்ஸ் இருவரும் காதலி வெற்றி பெற்றார்களா? விடியல் ராஜுவை போலீஸ் என்கவுண்டர் செய்தார்களா? காதல் ஜோடிகளை விடியல் ராஜு கொல்வதற்கான காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன் ஹரியும் நாயகி மான்ஸும் புதுமுகம் என்பதால் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும் மான்ஸ் கவர்ச்சியில் கவர்கிறார். ஹரி பாடல் காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். முகத்திலும் பாவனைகளை சரியாக வெளிப்படுத்த முடியாமல் தவித்திருக்கிறார். முந்தைய படத்தை விட இப்படத்தில் மிகவும் எதிர்மறையாக நடித்திருக்கிறார் விடியல் ராஜு. வில்லன் கதாபாத்திரத்திற்குண்டான தோற்றம் இருந்தாலும் முகத்தில் கம்பீரம் இல்லாமல் இருக்கிறது. அது நடிப்பிலும் இல்லாதது படத்திற்கு பலவீனம். ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதாபாத்திரங்கள் தேர்விலேயே ரொம்ப சறுக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயபாலன். வழக்கமான சினிமா கதையை கையாண்ட இயக்குனர், அதில் ஏதாவது புதுமையை புகுத்தியிருக்கலாம். பழைய படங்களின் தாக்கம் அதிகமாக படத்தில் காணப்படுகிறது. செல்வதாசன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பாண்டியராஜன், ரோஜா இடம் பெறும் பாடல் சிறப்பாக அமைந்திருக்கிறது. காதல் படத்தில் மெலோடி பாடல்கள் இல்லாதது வருத்தம். ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் ஒளிப்பதிவாளர் செல்வா.
மொத்தத்தில் ‘வேட்டையாடு’ திகில்………..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி