செய்திகள் விபச்சாரியிடம் போக பணமில்லாததால் மகளைக் கற்பழித்த தந்தை!…

விபச்சாரியிடம் போக பணமில்லாததால் மகளைக் கற்பழித்த தந்தை!…

விபச்சாரியிடம் போக பணமில்லாததால் மகளைக் கற்பழித்த தந்தை!… post thumbnail image
சண்டர்லேண்ட்:-வட கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் ஆலிவர் கேர்சைடு. இவரது மகள் சில்வியா பிரஸ்காட். ஆலிவர் தன் மகளுக்கு ஒரு வயது இருக்கும் போது தன் மனைவியிடமிருந்து பிரிந்து விட்டார். இதனால் தனது பாட்டியுடன் வசித்து வந்த சில்வியா 11 வயதை அடைந்த போது தன்னுடன் அழைத்து வைத்துக் கொண்டார். தன் அப்பாவை நேசத்தோடு பார்த்த அந்த மகளுக்கு அந்த தந்தை கொடுத்ததோ உடலாலும் மனதாலும் உச்சகட்ட பாலியல் கொடுமைதான்.

பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் செல்லும் அளவுக்கு போதிய பணம் இல்லாததால், வீட்டில் சில்வியாவின் தலை முடியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஆலிவர். தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமையை கடந்த 30 ஆண்டுகளாக யாரிடமும் சொல்லாமல் இருந்தார். தனக்கென்று இந்த உலகில் உள்ள ஒரே உயிரான பாட்டியின் மனதையும் நோகடிக்க விரும்பாத சில்வியா, அவரிடமும் இந்த விஷயத்தை சொல்ல முடியாமல் இந்த ரகசியத்தை மனதுக்குள் புதைத்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012 ஆண்டு அவரது பாட்டி இறந்ததை அடுத்து அவருக்குள் தைரியம் பிறந்தது.

அப்போது சில்வியா (47), பால் (52) என்பவரின் மனைவி. கல்லூரி செல்லும் மூன்று மகன்களுக்கு தாய். சிறுவயதில் தான் அனுபவித்த கொடுமைக்கு முடிவாக கடந்த ஆண்டு காவல் துறையில் புகார் அளித்தார் சில்வியா. அப்போதுதான் அவரது கணவர் பாலுக்கு தன் மனைவி அனுபவித்த கொடுமைகள் தெரிய வந்தது. தொடர் போராட்டங்களுக்குப் பின்னர் நீதிமன்றம் சென்று தனது தந்தை ஆலிவருக்கு(68) எட்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளார். அப்பா செய்த வன்கொடுமையால் பல இரவுகள் உறக்கமின்றி தவித்த தன்னுடைய மனபாரம் தற்போது குறைந்திருப்பதாகச் சொல்கிறார் சில்வியா. மேலும், தனது கதை, உறவினர்களாகவே இருந்தாலும் தங்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக வழக்குத் தொடரும் வலிமையை மற்ற பெண்களுக்குத் தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி