நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் சில தினங்களுக்கு முன் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். ஏனெனில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு புலி என்று பெயர் வைத்தனர். இந்த தலைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் ராஜா காலத்து கதை, விஜய் குள்ள மனிதராக நடிக்கிறார் என்று நாளுக்கு நாள் பல தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கிறது.
ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின் படி இப்படம் முன் ஜென்மம் பற்றிய கதையாம், தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற மகதீரா படத்தை போன்றே விஜய் அரசர் காலம், நிகழ் காலம் என கலக்கி வருகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி