அவரை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி, அவர் உடல் நிலை முடியாமல் இருந்த போது அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றேன், அங்கு அவர் என்னை பார்த்து கை அசைத்தார். நன்றாக இருக்கிறார் என்ற மன நிம்மதியுடன் வீட்டிற்கு சென்றேன்.
ஆனால், அந்த நிம்மதி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மறு நாள் அவரின் மரணச்செய்தி இடியாக என் காதில் விழுந்தது. 1980களின் சினிமாவே வேண்டாம் என்று ஊருக்கே போயிடலாம் என கிளம்பிய போது என் கையை பிடித்து எனக்கு நல்ல வழியை காட்டியவர் கே.பி. அவர் அன்று அதை செய்யவில்லை என்றால் நான் ஏதும் தவறான பாதையில் சென்றிருப்பேன். அவரின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு கருப்பு நாள் என மிக உருக்கமாக பேசியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி