செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ படத்தில் நடிக்க நடிகர் சுரேஷ் கோபி போட்ட கண்டிஷன்!…

‘ஐ’ படத்தில் நடிக்க நடிகர் சுரேஷ் கோபி போட்ட கண்டிஷன்!…

‘ஐ’ படத்தில் நடிக்க நடிகர் சுரேஷ் கோபி போட்ட கண்டிஷன்!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் பிரமாண்ட படம் ‘ஐ’. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தில் யார் யார் நடித்துள்ளார்கள் என்பது கூட இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, ‘ஐ’ படத்தில் டாக்டராக நடித்துள்ளதாக அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

மேலும் இப்படத்தில் நடிக்க அவர் சில நிபந்தனைகள் விதித்ததாகவும், அதை ஷங்கர் ஒததுக்கொண்டதாலேயே அவர் படத்தில் நடித்ததாகவும் கூறப்படுகிறது. படத்தில் புகை பிடிக்கும் மற்றும் மது குடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன், இரவு 8 மணிக்கு மேல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்ளமாட்டேன் என அனைத்து கண்டிசன்களையும் ஷங்கர் ஒத்துக்கொண்டாராம். அதனாலேயே அவர் சமீபத்தில் கேரளாவில் நடந்த பட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி