விமானத்தின் வால் பகுதியில் தான் கருப்பு பெட்டியும் இருக்கும் என்பதால் அதில் கருப்பு பெட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ரிமோட் மூலம் இயக்கப்பட்டு, கடலுக்குள் சென்று புகைப்படம் கருவியை வைத்து இந்தோனேஷிய மீட்பு குழுவினர் மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் கருப்பு பெட்டியை தீவிரமாக தேடி வந்தனர். விமானத்தின் வால் பகுதி கிடைத்த இடத்திற்கு அருகே கருப்பு பெட்டியிலிருந்து வரும் அதிர்வலைகள் உணரப்பட்டதாக தேடுதல் அதிகாரி சுப்ரியாடி தெரிவித்திருந்தார். நீர்மூழ்கி மூலம் அப்பகுதியில் நீச்சல் வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன் விளைவாக, கடலின் அடியில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் மூழ்கியிருந்த விமானத்தின் வால்பகுதியை இன்று மீட்ட வீரர்கள் அதனை கடலின் மேல்பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்தனர். மிதவை பைகள் மற்றும் ‘கிரேன்’ உதவியால் மீட்கப்பட்ட வால்பகுதி நீரின் மேற்பரப்பில் நின்றிருந்த மீட்பு கப்பலில் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. அதில் உள்ள கருப்பு பெட்டியை கைப்பற்றினால் 162 உயிர்களை பலி வாங்கிய அந்த கோர விபத்துக்கு என்ன காரணம்?… என்ற மர்மம் விலகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி