இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தனர். எனினும் சகா 35 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹாசில்வுட் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் 8வது விக்கெட்டுக்கு புவனேஸ்வர் குமார் களமிறங்கினார். அவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். குமாரும், அஸ்வினும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். இந்த ரன்கள் இந்தியாவின் ஸ்கோர் 450 ரன்களை தாண்ட உதவியது. 75 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் குவித்திருந்தபோது லயன் பந்துவீச்சில் குமார் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே அஸ்வின் 50 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த யாதவ் 4 ரன்களில் டக் அவுட்டாக, ஷமி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 475 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 97 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்று 43 ஓவர்கள் எஞ்சியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியினர் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டு கடைசி போட்டியிலும் வெற்றி பெற முயற்சிப்பார்கள் என்பது நிச்சயம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி