இன்று காலை சிறீசேனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மோடி, தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். அதே போல் டுவிட்டரிலும், தனது வாழ்த்து செய்தியை மோடி பதிவு செய்துள்ளார். புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறீசேனா தனது நீண்ட நாள் நண்பர் என்று கூறியுள்ள மோடி, இலங்கையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்றும், அந்நாட்டில் தொடர்ந்து அமைதி நிலவ இந்தியா உதவ தயார் என டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். ராஜபக்சேவும், சிறீசேனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி