சென்னை:-விக்ரம்-எமிஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ஐ’. படம் பொங்கல் தினத்தன்று படம் கண்டிப்பாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. இந்நிலையில் ஐ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் இணைய தளத்தில் பரவத் தொடங்கியது. பொங்கல் தினத்தன்று வெளியாகாது என்றும் இம்மாதம் 30ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டது.
இதுகுறித்து ஐ படத் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்கும் போது, ஐ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. திட்டமிட்டப்படி ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும் ஐ படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறியவர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். ஆகையால் ஐ படம் குறிப்பிட்ட நாளில் எந்தவித சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி