அதில் 2 கிரகங்கள் பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய நிலையில் உள்ளன. அவற்றுக்கு கெப்லர் – 438பி மற்றும் கெப்லர்–442 பி என பெயரிடப்பட்டுள்ளன. இவை சிவப்பு நிற சிறிய நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. இந்த நட்சத்திரங்கள் சூரியனை விட சிறியதாகவும், குளிர்ச்சி வாய்ந்ததாகவும் உள்ளன. இந்த 2 கிரகங்களும் பூமியை விட 12 சதவீதம் பெரியதாகும். இவற்றில் பூமியில் இருப்பதை போன்று பாறைகள் உள்ளன.
கெப்லர்–438பி கிராகத்தில் 70 சதவீதம் பாறைகள் உள்ளன. கெப்லர்–442பி கிரகத்தில் 60 சதவீதம் பாறைகள் இருக்கின்றன. இந்த 2 கிரகங்களிலும் சூரிய வெளிச்சம் நிரம்பி உள்ளது. தண்ணீர் ஆவி நிலையில் உள்ளது. இந்த 2 கிரகங்களிலும் பூமியை போன்று 97 சதவீதம் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி