சென்னை:-தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை மோனிகா, பிறகு ‘பகவதி’, ‘அழகி’, ‘சண்டக்கோழி’, ‘சிலந்தி’, ‘அ ஆ இ ஈ’ உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ல் திடீரென்று இஸ்லாம் மதத்துக்கு மாறி, தன் பெயரை ‘எம்.ஜி.ரஹீமா’ என மாற்றிக்கொண்டார். இந்நிலையில் அவருக்கும், சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் மாலிக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் திருமணம் வரும் 11ம் தேதி காலை 11 மணியளவில், சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறுகிறது. ளிமையான முறையில் திருமணம் நடப்பதால், திரையுலகினரை அழைக்கவில்லை. மீண்டும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. தொழில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார், மோனிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி