சென்னை:-கடந்த டிசம்பர் 29ம் தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 432 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த 21ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 184 ஆனது. விலை குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்தது. 6ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 632 ஆக இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.20 ஆயிரத்து 712 ஆனது.
இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 464 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.31 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,558–க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.37 ஆயிரத்து 537 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.40.20–க்கு விற்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி