பாதிக்கப்பட்ட பெண் டெல்லி கோர்ட்டுக்கு சென்று வாக்கு மூலம் அளித்தார். மாஜிஸ்திரேட்டு ரியா குகாவின் அறைக்கு சென்று அவர் முன் வாக்கு மூலம் அளித்தார். மாஜிஸ்திரேட்டு அறையில் இருந்து வெளியே வந்த இளம் பெண் மற்றொரு அறையில் இருந்து வெளியே வந்த டிரைவர் ஷிவ் குமாரைப் பார்த்து இந்தப் பேய் தான் என்னை சீரழித்தது என்று அலறினார்.
சம்பவம்பற்றி கோர்ட்டில் போலீசார் 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் பாதிக்கப்பட்ட பெண், ஷிவ் குமாரைப் பார்த்து அலறிய தகவல் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவ்குமார் யாதவின் செயலுக்குப் பின் டெல்லியில் உபேர் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி