புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, 15 வருடங்களுக்கு முன் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தான் பாத்திரம் கழுவியதாக கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் திறமைக்கு முக்கியத்துவம் தரும் எண்ணத்தினால் தான், இன்று தன்னால் மந்திரியாக முடிந்ததாக கூறிய அவர், ஒரு போதும் மெக்கானிக்காகவும், பிளம்பராகவும், கார்பெண்டராகவும் உள்ளவர்கள் தங்கள் வேலையை எண்ணி கவலைப்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். 15 வருடங்களுக்கு முன் பாத்திரங்கள் கழுவிய தான், இன்று நாட்டின் மந்திரியாக பதவியேற்றதன் மூலம் இந்தியா சாதிக்கப்பிறந்தவர்களை கொண்ட நாடு என்பதை அனைவரும் தெரிந்து கொண்டுள்ளார்கள் என அவர் மேலும் கூறினார். திறமையுள்ளவர்களை கவுரவப்படுத்துவதன் மூலமே திறமை மிக்க இந்தியாவை உருவாக்க முடியும் என்று தனது உரையின் போது ஸ்மிரிதி இரானி கூறியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி