இங்குள்ள வீரர்கள் ஓய்வறை நுழைவு வாயிலில் உள்ள சுவற்றில், பிலிப் யூக்சின் சிறிய வெண்கலச்சிலை பொறிக்கப்பட்ட நினைவுசின்னம் வைக்கப்பட்டுள்ளது. அதை தொட்டு வணங்கி விட்டு களம் புகுந்த டேவிட் வார்னர் 63 ரன்களில் இருந்த போது, ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அந்த நாட்டு ரசிகர்களின் மனதில் யூக்சின் நினைவு மீண்டும் ஆட்கொண்டது. அப்போது ஹெல்மெட்டை கழற்றிய வார்னர், யூக்ஸ் சுருண்டு விழுந்த இடம் அருகே மண்டியிட்டு, பிட்ச்சில் முத்தமிட்டு உருக்கமாக அஞ்சலி செலுத்தினார். ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டினார்கள். சதத்தை எட்டிய போதும், வான் நோக்கி பேட்டை உயர்த்தி யூக்சுக்கு அதை வார்னர் அர்ப்பணித்தார்.
முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு வார்னர் அளித்த பேட்டியில், காலையில் பயிற்சி செய்ய இறங்கிய போது யூக்சின் நினைவால் கண்ணீர் வந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதும் உணர்ச்சிவசப்பட்டேன். இனி எப்போதெல்லாமல் நான் இங்கு (சிட்னி) விளையாடுகிறேனோ நிச்சயம் பிலிப் யூக்சுக்கு இதே போல் அஞ்சலி செலுத்துவேன். இது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி