அருகருகே நெருக்கமாக அமர்ந்து போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்கள். அத்துடன் கோவில்களுக்கும் ஜோடியாக சென்றார்கள். அருகருகே உட்கார்ந்து யாகம், பூஜைகளும் செய்தனர்.
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்து இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு இருவீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர் என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
இந்நிலையில்தான் இருவரும் காதலை திடீரென முறித்து கொண்டு பிரிந்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காதல் முறிவுக்கான காரணம் தெரியவில்லை. இருவரும் அவரவர் வேலையில் தீவிரமாகியுள்ளனர். சந்திப்பதையோ பேசுவதையோ தவிர்க்கிறார்கள்.சமந்தா புத்தாண்டை தோழியுடன் கோவாவில் கொண்டாடினார். அந்த படங்களையும் இன்டர்நெட்டில் வெளியிட்டார். தெலுங்கு பட விழாக்களிலும் தனியாகவே கலந்து கொள்கிறார். சித்தார்த்தும் தனியாகவே நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி