செய்திகள்,விளையாட்டு கேப்டன் டோனியின் கோரிக்கையை தேர்வு குழு நிராகரித்தது!…

கேப்டன் டோனியின் கோரிக்கையை தேர்வு குழு நிராகரித்தது!…

கேப்டன் டோனியின் கோரிக்கையை தேர்வு குழு நிராகரித்தது!… post thumbnail image
மும்பை:-உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சந்திப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் கூடி வீரர்களை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள டோனி வீடியோ கான்பரன்சிங் மூலம் வீரர்கள் தேர்வு விவாதத்தில் கலந்து கொண்டார். இதில் டோனி விடுத்த கோரிக்கை எதையும் தேர்வுக்குழுவினர் ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கூடுதல் தொடக்க வீரராக முரளி விஜய்யையும், 5–வது வேகப்பந்து வீரராக மொகித்சர்மா அல்லது வருண் ஆரோனை தேர்வு செய்ய வேண்டும் என்று டோனி வற்புறுத்தி உள்ளார். ஆனால், தேர்வு குழுவினர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடினார். இதனால் அவரை டோனி பரிந்துரை செய்தார். வருண் ஆரோன், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இடம் பெற்று இருக்கிறார். அவர் டோனியின் சொந்த ஊரான ஜார்க்கண்டை சேர்ந்தவர்.

மொகித் சர்மா, டோனி தலைமை வகிக்கும் சென்னை சூப்பர் சிங்க்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார். இதனால் அந்த இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று டோனி வற்புறுத்தி இருக்கிறார். இவற்றை எல்லாம் தேர்வு குழு நிராகரித்தது. கடந்த உலக கோப்பையில் டோனியின் விருப்பப்படி தான் பியூஸ் சாவ்லா தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி