செய்திகள் ஆண் நண்பரை திருமணம் செய்யும் பிரபல நடிகர்!…

ஆண் நண்பரை திருமணம் செய்யும் பிரபல நடிகர்!…

ஆண் நண்பரை திருமணம் செய்யும் பிரபல நடிகர்!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல நடிகர் ஸ்டீபன் ப்ரை (வயது 57). இவர் இங்கிலாந்து படங்களில் நடித்து வந்ததுடன் டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். சினிமா கதாசிரியராகவும் இருந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

இந்நிலையில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து போராட்டம் மற்றும் பிராசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். இப்போது நடிகர் ஸ்டீபன் ப்ரை தனது ஆண் நண்பரும், நடிகருமான எலியட் ஸ்பென்சர் (27) என்பவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். இது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி