சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களும் இப்படத்தின் தலைப்பை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இப்படத்திற்கு முதலில் ‘மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வாள்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தது. இன்று படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, படத்திற்கு ‘புலி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி