சென்னை:-அமீர்கானின் ‘பிகே’ படம் கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதுவரை ரூ.550 கோடி வசூல் ஈட்டி இப்படம் சாதனை படைத்துள்ளது. ‘பிகே’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இதில் விஜய் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கனவே அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’ படத்தை தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து விஜய் நடித்தார். அதேபோல், இந்த படமும் தமிழில் ரீமேக் ஆனால் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி